'தேசிய எரிபொருள் பாஸ் நடைமுறை' - அமைச்சர் வெளியிட்ட மேலதிக தகவல்கள்
தேசிய எரிபொருள் பாஸ் நடைமுறை பெரும் முன்னேற்றம்
தேசிய எரிபொருள் பாஸ் நடைமுறை பெரும் முன்னேற்றத்தைக் காட்டுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இது குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தேசிய எரிபொருள் பாஸ் நடைமுறை QR திட்டத்தில் கிட்டத்தட்ட 50% எரிபொருள் நிலையங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
எரிபொருள் பாஸ் QR நடைமுறை
National Fuel Pass shows great improvement. Almost 50% Fuel Stations On FuelPass QR system.
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 27, 2022
4.25 Million Registered by 8.30pm Today. Total of 481 Fuel Stations Adopted to the system. 409 CEYPETCO & 72 @LankaIOCPLC. 158,208 users obtained Fuel with the Fuel Pass QR during the day pic.twitter.com/EZxLVaEXt8
மொத்தமாக 481 எரிபொருள் நிலையங்கள் (சிபெட்கோ - 409, லங்கா ஐஓசி - 72) இந்த அமைப்புக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இன்று 158,208 பேர் எரிபொருள் பாஸ் QR நடைமுறையில் எரிபொருளைப் பெற்றனர் என அவர் கூறியுள்ளார்.
இதேவெளை, இன்று இரவு 8.30 மணிக்குள் 4.25 மில்லியன் பேர் இதற்கான பதிவுகளை செய்துள்ளனர் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

