மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த அநுர அரசு : அடுத்தடுத்து உயரும் எரிபொருள் விலை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் (Ceylon Petroleum Corporation) விலைத் திருத்தத்திற்கு சமமாக தங்களது எரிபொருட்களின் விலையையும் திருத்துவதற்கு சினோபெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு (30.06.2025) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்திருந்தது.
இதன்படி, ஐஓசி எரிபொருள் நிறுவனமும் தங்களது விலைகளில் திருத்தம் செய்திருந்த நிலையில் சினோபெக் நிறுவனமும் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் விலைத் திருத்தம்
⛽ வெள்ளை டீசல் | 274 (முந்தைய விலை) | 289 (புதிய விலை) | 15 அதிகரிப்பு |
⛽ மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் | 178 (முந்தைய விலை) | 185 (புதிய விலை | 7 அதிகரிப்பு |
⛽ 92 ஒக்டேன் ரக பெட்ரோல் 1 லீட்டர் | 293 (முந்தைய விலை) | 305 (புதிய விலை | 12 அதிகரிப்பு |
⛽ 4 ஸ்டார் யூரோ 4 ரக லங்கா சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டேன் யூரோ 4 ரக பெட்ரோல் | மாற்றமில்லை | மாற்றமில்லை | மாற்றமில்லை |
இந்த நிலையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் விலைகளுக்கு சமமாக ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களின் எரிபொருள் விலைகளும் மாற்றமடைந்துள்ளது.
இதேவேளை முன்னதாக போதியளவான எரிபொருள் கையிருப்பு காணப்படுவதாகவும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என அரசு தெரிவித்திருந்த நிலையில் தற்போது எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை மக்கள் மத்தியில் பாரிய விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
