எரிபொருள் விலை அதிகரிப்பு -இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
increase
Dilum Amunugama
fuel price
By Jaso
எரிபொருள் விலையேற்றத்தை அதிகரிக்க வேண்டிய தேவையென்றால் டீசல் தவிர்ந்த ஏனைய எரிபொருளுக்கு மாத்திரமே விலையேற்றம் செய்யப்பட வேண்டுமெனபோக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் டீசல் விலை அதிகரித்த போதிலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கவில்லை மாறாக அதே விலையையே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தி வந்தனர்.
எனவே அரசாங்கம் இந்த தருணத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது அவசியமானால் குறைந்த பட்சம் டீசல் விலையை அதிகரிக்காமல் தற்போதைய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை பெற்றோல் 20 ரூபாவாலும் டீசல் 30 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி