எக்னெலிகொடவுடன் சகோதரர் போல் பழகினேன் – தமிழ்ச்செல்வன், ஞானவேலுக்குத் தெரியும்: முரளி சாட்சியம்

Sri Lanka Prageeth Eknaligoda Law and Order
By Shalini Balachandran Oct 16, 2026 09:52 PM GMT
Report

பிரகீத் எக்னெலிகொடவுடன் சகோதரர்கள் போல் பழகினேன் எனவும் தமிழ்ச்செல்வன் மற்றும் ஞானவேலுக்கு இது தெரியும் எனவும் முறைப்பாட்டுத் தரப்புச் சாட்சி சுமதிபால சுரேஷ் குமார் என்ற முரளி தெரிவித்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முறைப்பாட்டு தரப்பின் நான்காவது சாட்சியான முரளி என அழைக்கப்படும் சுமதிபால சுரேஷ் குமாரிடம் நேற்று (16-10-2026) நீண்ட குறுக்கு விசாரணை நடைபெற்றது.

ஒன்பதாவது எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அசித் சிறிவர்தன இந்த குறுக்கு விசாரணையை மேற்கொண்டார்.

மகிந்தவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல்: எக்னெலிகொட தெரிவித்ததாக மன்றில் வெளிப்படுத்திய சாட்சியம்

மகிந்தவின் விமானத்திற்கு ஏவுகணை தாக்குதல்: எக்னெலிகொட தெரிவித்ததாக மன்றில் வெளிப்படுத்திய சாட்சியம்

விடுதலைப் புலிகள்

இந்தநிலையில், "நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்த காலத்தில் பிரகீத் எக்னெலிகொட என்ற நபருடன் சகோதரர் போல் பழகிய காலம் இருந்ததல்லவா ?" என சட்டத்தரணி வினவ அதற்கு சாட்சி "ஆம்" ஐயா என பதிலளித்தார்.

எக்னெலிகொடவுடன் சகோதரர் போல் பழகினேன் – தமிழ்ச்செல்வன், ஞானவேலுக்குத் தெரியும்: முரளி சாட்சியம் | Ekneligoda Case Witness Testifies In Court

"அப்போது அவருடன் யுத்த களத்தில் உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டீர்கள் அல்லவா?" என சட்டத்தரணி மீண்டும் வினவ, அதற்கும் சாட்சி 'ஆம்' என பதிலளித்தார்.

"பிரகீத் எக்னெலிகொடவுடன் நீங்கள் கொண்டிருந்த தொடர்பு குறித்து விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் கூறினீர்களா?" என சட்டத்தரணி வினவிய போது சாட்சி “இல்லை” என பதிலளித்தார்.

ரஷ்யாவிடம் டீசல் வாங்க அமெரிக்கா முடிவு: கொதித்தெழும் பிரான்ஸ்

ரஷ்யாவிடம் டீசல் வாங்க அமெரிக்கா முடிவு: கொதித்தெழும் பிரான்ஸ்

புலனாய்வு பிரிவு

தொடர்ந்து கேள்வி எழுப்பிய சட்டத்தரணி, "எக்னெலிகொடவுடன் உங்களுக்கு இருந்த தொடர்பு குறித்து தமிழ்ச்செல்வனிடமும், விடுதலைப் புலிகளின் வெடிபொருள் தலைவராக இருந்த ஞானவேலிடமும் கூறியிருந்தீர்களா?" என வினவினார்.

அவர்கள் இருவரிடமும் அது குறித்து கூறியிருந்ததாக சாட்சி தெரிவித்தார்.

எக்னெலிகொடவுடன் சகோதரர் போல் பழகினேன் – தமிழ்ச்செல்வன், ஞானவேலுக்குத் தெரியும்: முரளி சாட்சியம் | Ekneligoda Case Witness Testifies In Court

"பொட்டு அம்மான் தானே புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவு தலைவர் மற்றும் தற்கொலை குண்டுதாரிகளை வழிநடத்தியவர் ?" என சட்டத்தரணி வினவ சாட்சி அது குறித்து எனக்கு தெரியாது என தெரிவித்தார்.

"நீங்கள் எக்னெலிகொடவுடன் கொண்டிருந்த சகோதர பந்தம், நட்பு குறித்து பொட்டு அம்மானிடம் கூறியிருந்தீர்களா?" என சட்டத்தரணி மீண்டும் வினவினார்.

இது தொடர்பில் சாட்சி பதிலளித்ததையடுத்து, "எக்னெலிகொடவுடன் உங்களுக்கு இருந்த தொடர்பு குறித்து பொட்டு அம்மானிடம் கூறியது எக்னெலிகொட அந்த கூற்றை கூறுவதற்கு முன்பா ? பின்பா ?" என சட்டத்தரணி வினவ அதற்கு முன் என சாட்சி பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

சவூதியிலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

சவூதியிலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016