எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வு
அத்துடன், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகியன தமது எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.
அந்த வகையில் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் ஓட்டோ டீசலின் விலை10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 392.00 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |