நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு - வெளிவந்தது புதிய விலை விபரம்
எரிபொருள் விலையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபன சந்தைப்படுத்தல் தலைமைக் காரியாலயத்தினால் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை லீட்டருக்கு ரூ .20 அதிகரித்துள்ளது. இதன் புதிய விலை 157 ரூபாய். ஒரு லீட்டர் டீசலின் விலை 7 ரூபாய் அதிகரித்து 111 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் 23 ரூபாய் அதிகரித்து 154 ரூபாயாகவும், ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் விலை 12 ரூபாயால் அதிகரித்து 144 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 7 ரூபாய் அதிகரிக்கப்பட்டு விலை 77 ரூபாயாக உயர்ந்துள்ளது.
எனவே, மேற்கூறப்பட்ட விலை மீள்திருத்தத்திற்கு அமைவாக தங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.