எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Middle East Anura Karunathilake
By Sathangani Sep 20, 2026 10:55 AM GMT
Report

இலங்கையில் செப்டெம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலைத் திருத்தம் இடம்பெறக்கூடும் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது நான் தான் : முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பை உடைத்தது நான் தான் : முன்னாள் ஜனாதிபதி ரணில் பகிரங்கம்

மத்திய கிழக்கு யுத்தம்

அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கு யுத்தம் ஆரம்பமானதோடு உலகின் வலுசக்தி சந்தையில், குறிப்பாக எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு | Fuel Price Revision At The End Of September In Sl

மார்ச், ஏப்ரல் மாதங்களில், உலகச் சந்தைக்கு நிகராக இல்லாவிட்டாலும், உள்நாட்டுச் சந்தையிலும் ஓரளவு எரிபொருள் விலையை அதிகரிக்க எமக்கு நேரிட்டது.

பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைந்த போது, உள்நாட்டுச் சந்தையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒருமுறை யுத்தம் தீவிரமடைந்தமையினால் உலகில் எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது.

எனவே வழமையாக நாம் ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும், அந்த மாதத்தின் சராசரி பெறுமதியைப் பார்த்து, எமக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு எவ்வளவு செலவானது என்று ஆராய்ந்து பார்த்துதான் நாம் எரிபொருள் விலையை மீளாய்வு செய்கிறோம்.

இலங்கை இளைஞருக்கு சவுதியில் மரண தண்டனை : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை இளைஞருக்கு சவுதியில் மரண தண்டனை : ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

டீசலை சந்தைக்கு விநியோகித்தல் 

அந்தவகையில் செப்டெம்பர் மாத இறுதியிலும் இந்த மீளாய்வைச் செய்ய நாம் எதிர்பார்க்கிறோம். ஆனாலும், ஏற்கனவே எமது எரிபொருள் விலை கணிசமான அளவு உயர்வாகவே காணப்படுவதாக நாம் கருதுகிறோம்.

எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து அரச தரப்பின் அறிவிப்பு | Fuel Price Revision At The End Of September In Sl

எனவே, மேலும் ஏற்படும் விலை அதிகரிப்பை எரிபொருள் பாவனையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பது குறித்து அரசாங்கத்திற்குள் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

அதேபோல, பிரச்சினை நிலவுவது எரிபொருள் விநியோகிக்கும் ஒருசில தனியார் நிறுவனங்களுக்குத்தான். அவர்கள் தான் இதில் ஏற்படும் நட்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது என்ற பிரச்சினையை முன்வைத்து, குறிப்பாக டீசலை சந்தைக்கு விநியோகிப்பதை மட்டுப்படுத்தியுள்ளார்கள்.

ஆகவே, சட்டரீதியான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து பார்த்து, ஏதாவது ஒரு உயர் மற்றும் குறைந்த விலையெல்லைகளுக்குள் அந்த நிறுவனங்களுக்குத் தங்களுடைய விலையிலேயே எரிபொருளை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்று நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்“ என தெரிவித்தார்.

அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு

அனோஜன் விவகாரத்தில் நரேந்திர மோடியின் உதவி! அரசாங்கத்துக்கு மனோ எடுத்துரைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி