நீண்ட வரிசையில் மக்கள்...! நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டு அபாயம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் (Srilanka) எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகிய நிலையில் நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகியுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று (28.02.2025) இரவு முதல் பாரிய வாகன வரிசைகள் காணப்படுகின்றமை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Sri Lanka Petroleum Corporation) இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோலிய ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து சங்கம் விலகியது.
பின்னர் பணம் பெறுவதன் அடிப்படையில் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
எனினும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon petroleum corporation) தெரிவித்துள்ளது.
அதன்படி, தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்று நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை
இந்நிலையில், நாட்டில் எரிபொருள் இருப்புக்களில் தட்டுப்பாடு இல்லை என்று தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜயந்த சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 நாட்கள் முன்
