எரிபொருள் நுகர்வோருக்கு இழக்கப்படும் வாய்ப்பு: வெளியான தகவல்
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3 சதவீத தள்ளுபடி எரிபொருள் நிலையங்களை இயக்க போதுமானதாக இல்லாததால், வங்கி அட்டைகள் மற்றும் கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்தி எரிபொருள் வாங்கும் வாய்ப்பை இனி வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என்று பெட்ரோலிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளனர்.
கடந்த நேற்யைதினம் (28) கொழும்பில் அனைத்து வணிக எண்ணெய் விநியோகஸ்தர்களும் ஒன்றுகூடி ஒரு கலந்துரையாடலை நடத்தியதாகவும், அதன் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
3 சதவீத தள்ளுபடி போதுமானதாக இல்லை என்று கூறி நான்கு முறை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதாகவும், ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் விநியோகஸ்தர் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் கடன்
இந்த நிலையில், அனைத்து பெட்ரோலிய விநியோகஸ்தர்களும் தற்போது, எந்தவொரு அரசு நிறுவனத்திற்கோ அல்லது பிற நிறுவனங்களுக்கோ எரிபொருள் கடன் வழங்குவதில்லை என்ற உடன்பாட்டை எட்டியுள்ளனர்.
அத்தோடு, உடனடியாக பணம் செலுத்தப்பட்டால் மட்டுமே இனிமேல் நிறுவனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மூன்று சதவீத தள்ளுபடியில் செய்யக்கூடிய வேலையை மட்டுமே செய்வோம் என்றும், பெட்ரோல் நிலையங்களில் உள்ள ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலத்திற்குள் மட்டுமே தங்கள் கடமைகளைச் செய்வார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
you may like this...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 நாட்கள் முன்
