சாரதிகளுக்கு மகிழ்ச்சி தகவல்: மற்றுமொரு எரிபொருள் விலையும் குறைப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளுக்கு இணையாக லங்கா IOC நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது.
இதனடிப்படையில், 299 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 294.00 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
313 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 318.00 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோலின் விலை
அதேவேளை, 335 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, 277 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் வெள்ளை டீசலின் (Auto Diesel) விலை திருத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 180 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விலையிலும் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |