மற்றுமொரு தரப்புக்கு எரிபொருள் கியூ.ஆர்! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
மின் பிறப்பாக்கிகள், மீன்பிடிப் படகுகள் மற்றும் விவசாய வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அல்லாத வகைகளுக்கு கியூ.ஆர் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த விடயத்தை டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, வாகனங்கள் அல்லாத வகைகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வரும் வாரத்தில் அதிகரிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
கியூ.ஆர் முறைமை
"எரிபொருள் நிலையங்களில் கியூ.ஆர் குறியீட்டைக் காண்பிப்பதன் மூலம் அவர்கள் எரிபொருளைப் பெற முடியும். திங்கட்கிழமை, இந்த வகையின் கீழ் எரிபொருளைப் பெறுவதற்கான நடைமுறையை நாங்கள் தெளிவாக விளக்குவோம்," என்று சுமுது ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் தொடரும் மோதலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் கியூ.ஆர் முறைமையை அறிமுகப்படுத்தி எரிபொருள் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்