முடிவுக்கு வரும் கியூ.ஆர் நடைமுறை - வெளிவந்த அறிவித்தல்
எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டு முறையை ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள்காட்டிய தகவல்கள தெரிவிக்கின்றன.
தேசிய எரிபொருள் கடவுச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் குறியீட்டு முறையானது மூன்று அல்லது நான்கு மாதங்களில் இரத்துச்செய்யப்படும் என்றும், சாதாரண நிலைமைகளின் கீழ் நாட்டில் தொடர்ந்து எரிபொருளை வழங்க முடியும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
எரிபொருள் விநியோகம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
