எரிபொருள் வழங்குவதில் இன்றுமுதல் புதிய நடைமுறை
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கும் மட்டுப்பாடு விதிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எரிபொருள் நிரப்பு நிலையங்களில், நாளொன்றில் நபர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்குவதில் நேற்று முதல் மீண்டும் வரையறைகள் விதிக்கப்பட்டன.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் சிற்றுந்து, மகிழுந்து மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு 8,000 ரூபாவுக்கும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
எனினும், இந்த எரிபொருள் விநியோக கட்டுப்பாடு பேருந்து, பாரவூர்தி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு இல்லை எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


