நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்கள் : அதிகரிக்கப்படவுள்ள QR ஒதுக்கீடு
பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ள நிலையில் நாட்டில் ஜூலை மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முனையங்களில் இவற்றை இறக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, முதலாவது கப்பலில் 20,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 20,000 மெட்ரிக் டொன் டீசலும், இரண்டாவது கப்பலில் 35,300 மெட்ரிக் தொன் பெட்ரோல் என்பன இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்
மேலும், தலா 37,000 மெட்ரிக் டொன் டீசல் அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் இந்த மாத இறுதியில் வருகை தரவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கையிருப்பு மற்றும் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் எதிர்வரும் ஜூலை மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தநிலையில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான அளவு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் கையிருப்பு நிலை சீராக உள்ளதால், தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர். ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பிலும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |