எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென பற்றிய தீ
Sri Lanka Police
Sri Lankan Peoples
Fire
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
திடீரென பற்றிய தீ
பண்டாரகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களின் ஓய்வறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.
மின் கசிவு காரணமா
எரிபொருளுக்கு நிரப்பு நிலைய வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து தீயை முழுமையாக அணைத்தனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
