நாளை - நாளை மறுநாள் எரிபொருள் விநியோகத்தில் உள்ள சிக்கல்! எடுக்கப்படவுள்ள முடிவு
நாளையும் நாளை மறுநாளும் ஒற்றை நாட்கள் என்பதால், எரிபொருள் வழங்குவதற்கான நடைமுறை குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இருப்பு
மார்ச் 31-ஆம் திகதியான நாளைக்குப் பிறகு எரிபொருள் விநியோகம் செய்வது குறித்து எடுக்கப்பட வேண்டிய முடிவில் இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தும் என்றும், நாட்டில் மே மாத நடுப்பகுதி வரை எரிபொருள் இருப்பு உள்ளது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கூடுதலாக, நுகர்வோர் எல்லா நேரங்களிலும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமீபத்திய எரிபொருள் பங்கீட்டு முறையின்படி, வாகனப் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் 0, 2, 4, 6, அல்லது 8 ஆக இருந்தால் இரட்டைப்படை நாட்களிலும், 1, 3, 5, 7, அல்லது 9 ஆக இருந்தால் ஒற்றைப நாட்களிலும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 39 நிமிடங்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
2 நாட்கள் முன்