QR முறைமை எரிபொருள் விநியோகம் - சற்றுமுன் அரசின் அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
QR Code
By Thulsi
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த இன்று (19) நாடாளுமன்றத்தில் எரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் ஒதுக்கீடு
எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு வகை வாகனத்திற்குமான எரிபொருள் ஒதுக்கீடு குறித்தும் உரையில் அறிவித்துள்ளார்.
அந்தவகையில் கார் - 25 லீற்றர் முச்சக்கர வண்டி - 20 லீற்றர் வேன் - 50 லீற்றர் மோட்டார் சைக்கிள் - 8 லீற்றர் பேருந்து - 100 லீற்றர் லொரி - 200 லீற்றர் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி