எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் - வெளிவந்த அறிவிப்பு
அடுத்த சில நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ள அவர், எரிபொருள் வருகை தாமதம் மற்றும் அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அடுத்த வார தொடக்கத்தில் அனுப்புவதற்கு வழங்குனர்கள் உடன்பட்டுள்ளனர். இதனை எனக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கொடுக்கல் வாங்கல் காரணங்களுக்காகவே எரிபொருள் வழங்கல்களை சரியான நேரத்தில் நிறைவேற்ற முடியவில்லை.
அடுத்த ஏற்றுமதிகள் வரும் வரை, பொதுப் போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வரையறுக்கப்பட்ட டீசல் மற்றும் பெட்ரோல் அடுத்த வாரம் முழுவதும் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும். இருப்பினும் ஏற்றுமதிகளின் வருகைக்கான திகதிகளை உறுதிப்படுத்த முடியவில்லை.
அடுத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி கிடைக்கும் வரை சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் தற்காலிகமாக மூடப்படும்.
புதிய மற்றும் ஏற்கனவே உள்ள அனைத்து விநியோகஸ்தர்களுடனும் நாங்கள் வேலை செய்கிறோம். தாமதம் மற்றும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.