உயிரிழந்த தேரருக்கு முழு அரச மரியாதை! அரசதலைவர் ஆலோசனை
srilanka
Velamidiawe Kusaladhamma Thera
(Gotabaya Rajapaksa
By MKkamshan
வெலமிடியாவே குசலதம்ம தேரர் (Velamidiawe Kusaladhamma Thera)தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார்.
களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும்,பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவரும், அக்கமஹா பண்டிதர் டொக்டர் வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியை நடைபெற உள்ளது.
இந்நிலையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களைத் தொடர்புகொண்டுள்ள அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) , இறுதிக் கிரியைக்கான நிகழ்வுகளை, பூரண அரச மரியாதையுடன் நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
வெலமிடியாவே குசலதம்ம தேரர் இந்நாட்டின் சாசன முன்னேற்றத்திற்காக பெரும் சேவை செய்த துறவியென்பது குறிப்பிடத்தக்கது.