பிக்குவின் பெயரைப் பயன்படுத்தி நிதிசேகரித்தவர் கைது!
Police
Arrest
Ajith Rohana
SriLanka
By Chanakyan
பௌத்த மதகுரு ஒருவரின் பெயரை உபயோகித்து பொருட்களை கொண்டு செல்வதைப் போன்று சூட்சுமான முறையில் பயணித்த 33 வயதுடைய நபரொருவர் மிரிஹான பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு பிரதேசங்களுக்கு சென்று நிதி சேகரித்துள்ள குறித்த நபர் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள தகவலுக்கமையவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்