வன்னியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : பிரதியமைச்சர் உறுதி

Sri Lanka Army Kilinochchi Mullaitivu Vanni Aruna Jayasekara
By Kajinthan Jul 31, 2026 11:02 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர், தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே நாட்டின் 25 மாவட்டங்களிலும் முப்படையினரின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் வங்கியிடமிருந்து இழப்பீடு! காப்புறுதி வைப்பாளர்கள் குறித்து மத்திய வங்கியின் சிறப்பு அறிவிப்பு

மக்கள் வங்கியிடமிருந்து இழப்பீடு! காப்புறுதி வைப்பாளர்கள் குறித்து மத்திய வங்கியின் சிறப்பு அறிவிப்பு

 கிளிநொச்சி மாவட்டச் செயலாளரின் கோரிக்கை  

நாட்டில் ஏற்படும் அசாதாரண மற்றும் இடர் நிலைமைகளின் போது காவல்துறையினருடன் இணைந்து முப்படையினர் களப்பணியாற்றுகின்றனர்.

போர் நிறைவுற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரை 9,480 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 615 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் மூலம் மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்“ என தெரிவித்தார்.

வன்னியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : பிரதியமைச்சர் உறுதி | Land Release Under The Military Control In Vanni

இதேவேளை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரனால் கனகாம்பிகைக்குளத்தில் காணி விடுவிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டதுடன்  இராணுவ முகாமின் வேலியை 10 மீற்றர் தூரம் பின்னோக்கி நகர்த்துவதன் மூலம் 3 குடும்பங்களுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் காணியை விடுவிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டிய நிலையில் இதனைச் சாதகமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகப் பாதுகாப்பு பிரதியமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் திருவிழாக் காலங்களில் கனகாம்பிகைக்குள முகாம் அமைந்துள்ள வீதியைப் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் பிரதியமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

மேலும், அப்பகுதியில் இராணுவக் கட்டடத்துடன் உள்ள காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினரால் 8.5 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ள நிலையில், கோயில் நிர்வாகத்தால் அத்தொகையைச் செலுத்த முடியாதிருப்பதை மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டியதையடுத்து, அதனை மீள்பரிசீலனை செய்யவும் பிரதியமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆண்டுகளில் 2,262.5 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 1,493.2 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன. இதில் வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவில் அமைந்துள்ள காணிகள் மிக முக்கியமானவையாகும் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து வட்டுவாகல் மற்றும் கேப்பாபிலவு காணி உரிமையாளர்கள் சார்பில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

வன்னியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் : பிரதியமைச்சர் உறுதி | Land Release Under The Military Control In Vanni

வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு முன்பாக, அப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நிறைவுசெய்து காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதியமைச்சர் உறுதி அளித்தார்.

கேப்பாபிலவில் உடனடியாக 6.5 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில் மாவட்ட மட்டத்தில் குழுவொன்று அமைக்கப்பட்டு, கள நிலைமைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன், வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி, கிழக்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷட உதவிச் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!

ஸ்பெயின் பகுதிக்குள் 24 மணிநேரத்தில் புகுந்த 49,000 மொரோக்கர்கள் : ஐரோப்பிய எல்லைகளில் பதற்றம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026