கொழும்பு வைத்தியசாலைகளில் உள்ள சடலங்களுக்கு நாளை இறுதிச்சடங்கு
corona
colombo
sri lanka
death
By Shalini
கொழும்பில் உள்ள பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் அடையாளம் காணப்படாத சடலங்களை நாளைய தினம் (12) புதைப்பதற்கு அல்லது எரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (11) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பின் போது கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை தெரிவித்தார்.
அந்த வகையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 40 சடலங்களும், களுபோவில வைத்தியசாலையில் 14 சடலங்களும், வைக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு முதல் இந்த சடலங்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன.
கொரோனாவால் சடலங்கள் நிரம்பிக்காணப்படுவதால், அடையாளம் காணப்படாமல் உள்ள சடலங்களை நாளைய தினம் (12) அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி