ஜனாதிபதி அநுர அரசாங்கத்துடன் சஜித் தரப்பு சமரசம்
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாங்கம் பொதுத் தேர்தலின் மூலம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறும் பட்சத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் ஒத்துழைக்கும் என அதன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்களான ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாசிம், மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம் என அனைத்து தலைவர்களும் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை
இதேவேளை, ஜனாதிபதி பதவியை வகிக்கும் அதே கட்சிக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற மக்கள் அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பாரிய கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரையில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |