ஈரான் கப்பலுடன் தொடர்புடையவை அல்ல! இலங்கை கடற்கரையில் மிதக்கும் எண்ணெய் படலம்
ஹிக்கடுவ - நரிகம கடற்கரையில் கண்டறியப்பட்ட எண்ணெய் படலங்களுக்கும், அமெரிக்காவால் இந்திய பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கப்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எண்ணெய் இருந்ததாக நம்பப்படும் பீப்பாயும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெண்டி தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி, எண்ணெய் படலம் மசகு எண்ணெய் என அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் கேள்விக்குரிய பீப்பாய் ஈரானிய கப்பலுக்கு சொந்தமானது அல்ல என்று தெரியவருகிறது.
விசாரணை
கடலோர காவல்படை குழுக்களும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையமும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரையோரத்தில் சுமார் 40 மீற்றர் தூரத்திற்கு எண்ணெய் படலம் பரவியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவை சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என கூறியுள்ளார்.
இருப்பினும், எண்ணெய் எந்த கப்பலில் இருந்து வந்தது என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |