ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள தலைவர்கள்: வழங்கப்படவுள்ள உணவுகள் வகைகள்
இந்தியாவில் இடம்பெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள தலைவர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த மாநாடானது இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம் பெறவுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக தலைவர்கள் மற்றும் பல நாடுகளின் பிரதிநிதிகள் இவ் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
சைவ உணவுகள்
இந்நிலையில் இவர்களுக்கான இந்திய உணவு முறைகள் குறித்து தகவல்களும் வெளியாகியுள்ளன.
பரிமாறவுள்ள உணவுகள் அவர்களுக்கான உணவு பட்டியலில் சைவ உணவுகளும் இடம்பெற்றுள்ளன. அதில், சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஜெய்ப்பூரில் மதிய உணவுகளுக்கு தயார்செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கும் சிறுதானிய உணவுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய உணவுகள்
வெளிநாட்டு தலைவர்களுக்கு இந்திய உணவுகளில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட தாளி, புலாவ், இட்லி ஆகியவை முக்கியமாக இடம்பெறும்.
ராஜஸ்தானின் தால் படி சர்மா, மே.வங்கத்தின் ரசகுல்லா, தென் இந்தியாவின் மசால் தோசை, பீஹாரின் லிட்டி சோக்கா என ஒவ்வொரு மாநிலத்தில் சிறப்பான உணவுகளை பரிமாறவுள்ளனர்.
மேலும், பானி பூரி, சப்பாத்தி சாத், தஹி பல்லா, சமோசா ஆகியவையும் இருக்கும் என்று பலரால் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)