மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் - இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு அடுத்த கட்ட பணம்
புதிய இணைப்பு
2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினம் (08) குறித்த அஸ்வெசும பயனாளிகளுக்கான பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவு
இதன்படி, 1550 மில்லியன் ரூபா இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டத்தில் மாத்திரம் 6 இலட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது.
எனினும் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் குறித்த ஒரு நாளில் இந்தக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாவது கட்டமாக மேலும் 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்துக்கான பணம்ரூபா 1550 மில்லியன்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
இந்த தகவலை அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாளைய தினம் வரவு
அதில் மேலும், குறித்த பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நாளைய தினம் வரவு வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நலன்புரி நன்மைகள் சபை கணக்குகளைச் சரிபார்த்த பிறகு மீதிப் பயனாளிகளுக்கான பணம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜூலை மாதத்திற்கான பணம் செலுத்திய பிறகு அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் ஓகஸ்ட் மாதத்திற்கான பணத்தை செலுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
(1/3) As the 2nd phase of "Aswesuma" a payment of Rs.1'550 millions for another 257,170 beneficiaries have been paid for the month of July. Accordingly, the banks will credit the beneficiary accounts by tomorrow. pic.twitter.com/SopldspTuQ
— Shehan Semasinghe (@ShehanSema) September 7, 2023