காலநிலை மாற்றம் தொடர்பில் ஜி20 மாநாட்டில் விசேட கவனம்
உலகின் செல்வந்த நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் ஜி20 மாநாடு இத்தாலியில் இன்று இடம்பெற்றவுள்ளது.
உலக நாடுகள் தற்போது காலநிலை மாற்றம் மற்றும் கொரோனாத் தொற்றுக் காரணமாக பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துவரும் பின்னணியில் இத்தாலியில் இன்றும் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.
இதனால், காலநிலை மாற்றம் மற்றும் கொரோனாத் தொற்று என்பன இம்மாநாட்டின், நிகழ்ச்சி நிரலின் முக்கிய பேசுபொருளாக இருக்கும் என கூறப்படுகிறது.
செல்வந்த நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடுகின்ற மாநாட்டில் இரு பிரச்சனைகள் குறித்தும் விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் பிளடிமீர் புட்டின், ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
கொரோனா பெருந்தொற்றின் பின்னர் உலகத் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் ஒரு மாநாடாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
