உக்ரைன் அதிபரிடம் மோடி கொடுத்த வாக்குறுதி
Volodymyr Zelenskyy
Narendra Modi
By Vanan
ரஷ்ய - உக்ரைன் போரில் தீர்வு ஏற்படுவதற்கு இந்தியாவும், நானும் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வோம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாடு மே 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
ஜெலன்ஸ்கி - மோடி சந்திப்பு
ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது, உலகில் உக்ரைன் போர் மிக பெரிய ஒரு விஷயமாகும். இதனை பொருளாதாரம், அரசியல் சார்ந்த ஒரு விவகாரம் என்றளவில் மட்டும் நான் பார்க்கவில்லை.
இது மனித இனத்திற்கான விவகாரமாகும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பெப்ரவரியில் போர் தொடங்கிய பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி