கஜேந்திரகுமார் தேர்தலை புறக்கணிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது: விக்னேஸ்வரன் திட்டவட்டம்(காணொளி)
வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திரகுமார் தேர்தலை புறக்கணிப்பது நடைமுறை சாத்தியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“வழமைப் போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தேர்தல் புறக்கணிப்பை கண்காணித்து வழிநடத்தியிருப்பார்கள்.
எனினும் தற்பொழுது வடக்குக் கிழக்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவ்வாறான ஒரு பின்னணியில் கஜேந்திரகுமார் எவ்வாறு தேர்தல் புறக்கணிப்பை வெற்றிகரமாக நடைப்படுத்துவார்?
மேலும் சிங்கள தேசிய கட்சிகளுக்கு ஆதரவான உள்ளூர் கட்சி கட்சிகள் இயங்கி வருகின்றன.
இவ்வாறான ஒரு பின்னணியில் எவ்வாறு கஜேந்திரகுமார் சிங்கள வேட்பாளர் ஒருவரை புறக்கணிக்குமாறு கோர முடியும்?கடந்த பொதுத்தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வாக்குகள் என்ன பட்ட போது பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்வாறான ஒரு பின்னணியில் தேர்தலை பொதுமக்கள் நிராகரித்தால் என்ன நடக்கும், வாக்காளர்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களது வாக்குகள் அளிக்கப்படலாம்.
தேர்தல் காலத்தில் தேர்தல் புறக்கணிப்பானது தமிழர் பிரச்சினைகள் குறித்த பேச்சுக்களை உறுதி செய்ய செய்யாது என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |