நாடாளுமன்றில் முட்டிமோதிக்கொண்ட கஜேந்திரகுமார் - சுமந்திரன் - டிரான் அலஸ்..!

Gajendrakumar Ponnambalam M. A. Sumanthiran Sri Lankan political crisis
By Kiruththikan Jun 08, 2023 01:07 PM GMT
Report

கஜேந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவில்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறை அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நேற்று (07) காலை கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மாலை பிணையில் விடுவித்தது.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், "கடந்த 2 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான காணொளிகளை பார்த்தேன். அதில் காவல்துறையினர் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர்.

ஆனால் கஜேந்திரகுமார் குறித்த காவல்துறையினரை அச்சுறுத்தும் வகையிலும் அவர்களை தகாத வார்த்தைகளைக் கொண்டு திட்டியும் உள்ளார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது கஜேந்திரகுமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நடந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகின்றது" எனக் கூறினார்.

வாக்குவாதம்

நாடாளுமன்றில் முட்டிமோதிக்கொண்ட கஜேந்திரகுமார் - சுமந்திரன் - டிரான் அலஸ்..! | Gajendrakumar Mp Arrest Sumanthiran Speech

இதன்போது குறுக்கிட்ட கஜேந்திரகுமார் அவர்கள், "அந்த சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திற்கு சிவில் உடையில் வந்த இருவர் தம்மை காவல்துறையினர் என கூறினர். அவர்களிடம் நான் அவர்களின் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்ட பொழுது அதற்கு மறுப்பு தெரிவித்து என்னை தாக்கினர்" என குறிப்பிட்டார்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இரண்டு கேள்விகளை முன்வைத்தார் . 

  1. சிவில் உடையில் வந்து தம்மை காவல்துறையினர் என கூறிய இருவரும் ஏன் தமது அடையாள அட்டைகளை காண்பிக்க மறுத்தனர் ? 
  2. கஜேந்திரகுமார் தான் இன்று நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும் என கூறிய போது அவ்வளவு அவசரமாக அவரை கைது செய்வதற்கு காரணம் என்ன ? என அமைச்சர் டிரான் அலசிடம் கேட்டார்.

இதற்கு காவல்துறையினர் தமது கடமைகளை சரிவர செய்துள்ளனர். காவல்துறையினர் மீது எந்த தவறும் இல்லை என அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டார்.

இதன்போது கஜேந்திரகுமார் அவர்கள், "அப்போது பாதுகாப்பு அமைச்சரான ( டிரான் அலஸ்) உங்களின் உத்தரவின் பேரிலா என்னை கைது செய்தனர் என கேள்வி எழுப்பினார்.

இதன்போது குறுக்கிட்ட சாபாநாயகர் இந்த சம்பவம் குறித்த காவல்துறை விசாரணைகள் இடம்பெற்று வருவதால் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதோடு இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024