சிறிலங்கா அரசாங்கத்திடம் கஜேந்திரகுமார் விடுத்துள்ள கோரிக்கை
government
gajendrakumar ponnambalam
request
By Vanan
ஒற்றையாட்சிக்குள் வருகின்ற அரசியலமைப்பை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) வலியுறுத்தியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று(6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடைய அரசாங்கம் தன்னிச்சையாக அரசியலமைப்பை நிறைவேற்ற முற்படுவதாக இதன்போது அவர் கடுமையாக சாடியுள்ளார்.