கஜேந்திரன்களின் இந்திய பாய்ச்சல்
கஜேந்திரன்களின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முகங்கள் தமிழ்த் தேசிய பசுமை இயக்க ஐங்கரநேசனுடன் இணைந்து தமிழகத்துக்கு பறந்துள்ளன. நோக்கம் தமிழர்களுக்கு சமஷ்டி அரசியல் யாப்பை கொண்டு வருவதற்கான இந்திய அழுத்தங்களை வழங்குவதே என கஜேந்திரகுமார் குறிப்பிடுகிறார்.
கடந்த மாவீரர் நாளுக்கு அண்மையாக ஐங்கரநேசனின் அழைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் யாழ்ப்பாணத்துக்கு சென்று திரும்பிய பின்னரும் இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற இயற்கை அவலங்களை மையப்படுத்தி ஒரு அனைத்துலக நன்கொடையாளர் மாநாட்டை அனுரதரப்புக் கூட்டவுள்ள நிலையிலும் இந்தப்பயணம் இடம்பெற்றுள்ளது
இலங்கையில் தமிழர்களின் அரசியல் பிரச்சனை தீர்க்கப்படாத போதிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இனிமேல் இலங்கையர்கள் அகதி தஞ்சம் கோருவதற்கும் சவால்கள் வரவுள்ளமைக்குரிய கட்டியங்கள் வரும் நிலையில் உள்ளுரில் இவ்வாறான நிலவரங்கள் பதியப்படும் நிலையில் இவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து வருகிறது இன்றைய செய்திவீச்சு….
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்