தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை! உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு

Galle Face Protest Sri Lankan Peoples Law and Order Deshabandu Tennakoon
By Dhilak May 25, 2026 08:33 AM GMT
Report

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் எதிர்பார்த்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் மேற்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான இந்த குற்றப்பத்திரிகைகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்சவுக்கு பிணை..!

விமல் வீரவன்சவுக்கு பிணை..!

மனு விசாரணை

காலி முகத்திடல் வன்முறைச் சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னக்கோனை ஒரு சந்தேகநபராகப் பெயரிடுமாறு காவல்துறைக்கு சட்டமா அதிபர் பிறப்பித்திருந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக ரத்து செய்திருந்தது.

தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை! உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு | Galle Face Protest Chargesheet Against Deshabandu

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த புதிய தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நீதியரசர்களான ஏ.எச்.எம்.டி. நவாஸ், அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், இந்த மேல்முறையீட்டு மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச வீசா

இன்று முதல் 40 நாடுகளுக்கு இலவச வீசா

மாயாமான 2.5 மில்லியனில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே மீட்பு! பெரும் ஏமாற்றத்தில் அரசாங்கம்

மாயாமான 2.5 மில்லியனில் வெறும் 200 டொலர்கள் மட்டுமே மீட்பு! பெரும் ஏமாற்றத்தில் அரசாங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி