போராட்டக்கள கூடாரங்களில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா செடிகள்!
Sri Lanka Police
Sri Lankan Peoples
SL Protest
Sri Lanka Police Investigation
By pavan
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து கஞ்சா செடிகள் உட்பட்ட சில சந்தேகத்திற்கு புறம்பான பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
காலிமுகத்திடல் பகுதியில் இன்று(12) காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து அப்பகுதியில் அகற்றப்படாமல் எஞ்சியிருந்த கூடாரங்கள் அகற்றும் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
போதை மாத்திரைகள்
இதன்போதே கஞ்சா செடிகள், சிம் அட்டைகள் மற்றும் பெருமளவிலான மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி