பிக்குகளின் போராட்டத்தால் முடங்கிய காலி வீதி போக்குவரத்திற்காக சற்றுமுன்னர் திறப்பு
Sri Lanka Police
Colombo
Protest
By Jaso
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பிக்குகளின் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த காலி வீதி போக்குவரத்திற்காக தற்போது திறக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள், காலி வீதியின் நடுவில் தற்காலிக கொட்டகை ஒன்றை அமைத்திருந்தனர்.
பிக்குகளின் கூடாரத்தால் முடங்கிய போக்குவரத்து
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், கொட்டகையை அகற்றுமாறு உத்தரவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கொட்டகையை வீதியின் ஓரமாக நகர்த்தி வைத்தனர்.
அதன் பின்னர் காவல்துறையினர் காலி வீதியில் ஒரு பாதையை (One Lane) மட்டும் போக்குவரத்திற்காக திறந்து போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றனர்..
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி