பொய்த்துப்போன அமைச்சர் உதய கம்மன்பிலவின் அறிவிப்பு
oman
fuel import
borrow
Udaya gammaṉpila
By Sumithiran
எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் ஓமானிடமிருந்து 3600 அமெரிக்க டொலர் கடனுதவி பெறவுள்ளதாக அண்மையில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்த நிலையில் அதனை மறுக்கும் வகையில் அந்நாட்டின் நிதியமைச்சின் பேச்சாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி எந்தவொரு நட்பு நாட்டுக்கும் உத்தியோகபூர்வமாக மிகப்பெரிய கடனை வழங்க ஓமானிய அரசாங்கம் அனுமதி வழங்கவோ உடன்படவோ இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வானொலி ஒலிபரப்பு ஒன்றில் அந்நாட்டின் நிதியமைச்சின் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஓமானிலிருந்து கடன்பெறும் அமைச்சர் உதய கம்மன்பிலவின்(Udaya gammaṉpila) திட்டத்திற்கு இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.