ரோஹித் சர்மாவுக்கும் விராட் கோலிக்கும் ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்: வெளியான காரணம்
இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் (Gautam Gambhir) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அணித்தலைவர் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு சிக்கல் ஒன்று ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், ரி20 உலக கோப்பையை வென்ற நிலையில் விராட் கோலி (Virat Kohli) , ரோகித் சர்மா (Rohit Sharma) ஜடேஜா (Ravidnra Jadeja) ஆகியோர் தற்போது விடுமுறையில் இருக்கின்றனர்.
இந்தநிலையில், இலங்கைக்கு (Sri Lanka) எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சம்பியன்ஸ் கோப்பை
தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் அதிகம் நடைபெற இருப்பதால் அதற்காக கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொள்கிறோம் என்று இருவரும் கூறி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது விராட் கோலி லண்டனில் இருக்கின்ற நிலையில் சம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் இந்தியா (India) ஒரு சில ஒருநாள் போட்டிகளில் தான் விளையாடவிருப்பதால் அதற்கான அணியை கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்திய அணி உள்ளது.
இதனால் இலங்கைக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் சிரேஸ்ட வீரர்கள் இடம்பெற வேண்டும் என்று கம்பீர் வலியுறுத்திஅவர்களுக்கு வழங்கிய விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கம்பீரின் பேச்சு
தற்போது ரி20 தொடரில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட போவதில்லை என்பதால் அவர்களுக்கு அதிக அளவு ஓய்வு கிடைக்கும் என்றும் கம்பீர் தெரிவித்துள்ளார்.
எனினும், கம்பீரின் பேச்சு எடுபடவில்லை என தெரியவந்த நிலையில் கேஎல் ராகுல் தலைமையில் அணியை தேர்வு செய்ய தேர்வு குழு முடிவு எடுத்திருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |