அரசுக்கு நேரடி சவால் விடுத்துள்ள உதய கம்மன்பில!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது என விமர்சிக்கப்பட்டுள்ளது.
பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மாதிரி அளவு
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் வெறும் 1240 பேரை மட்டும் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்காது.

தேசிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு விடயத்தை இவ்வளவு சிறிய மாதிரி அளவுடன் மதிப்பீடு செய்வது ஏற்புடையதல்ல.
- 2024 ஜனாதிபதித் தேர்தல்: 42% வாக்குகள்
- பொதுத்தேர்தல்: 62% வாக்குகள்
- 2025 மே மாத உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 43% வாக்குகள்
பொருளாதாரப் பாதிப்பு
ஆட்சிக்கு வந்து ஆறு மாத காலத்துக்குள்ளேயே அரசின் வாக்கு வங்கி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பொருளாதாரப் பாதிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் சூழலில் இத்தகைய சாதகமான அறிக்கையை வெளியிடுவது நகைப்புக்குரியது.

ஜனாதிபதி மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் இந்த அமைப்பு, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் உண்மையான மக்கள் தீர்ப்பு வெளியாகும் மற்றும் மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்