பேருந்து - பாரவூர்தி மோதி கோர விபத்து: இருவர் உயிரிழப்பு..!
Sri Lanka
Death
By Kiruththikan
கடற்படைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்து இன்று(16.06.2023) காலை கம்பஹா தொம்பே - கிரிதர - தெல்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பாரவூர்தியில் பயணித்த 39 மற்றும் 46 வயது மதிக்கத்தக்க இருவரே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரவூர்தியுடன் மோதி விபத்து
குறித்த விபத்தில் பலத்த காயமடைந்த மேலும் ஒருவர் ராகமை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படை சொந்தமான பேருந்து கிரிந்திவெல பகுதியில் இருந்து கடற்படை முகாம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாரவூர்தியுடன் மோதி இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
