கம்பஹாவில் ஏற்பட்ட பதற்ற நிலை - மர்ம நபரால் துப்பாக்கி பிரயோகம்!
Gampaha
Shooting
Sri Lanka
Western Province
By Kalaimathy
கம்பஹா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அடுத்து அப்பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
கம்பஹா, மாகவிட்ட பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு முன்பாகவே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இனம் தெரியாத இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவர் காயம்
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இருவரும் உந்துருளியில் வந்தாகவும் துப்பாக்கி பிரயோகத்தினால் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பான மேலதிக விசாரனை கம்பஹா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி