கணவன் - மனைவி பிரச்சினை..! மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அருந்திய தந்தை
கம்பளை - தெல்பிட்டிய செவன கிராமத்தில் தந்தையொவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் குளிர்பானத்தில் விஷத்தினை கலந்து கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது 4 வயது ஆண் பிள்ளையும், 7 மற்றும் 13 வயதுகளுடைய இரு பெண் பிள்ளைகளும், 40 வயதான தந்தையுமே விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தவறான முடிவிற்கு காரணம்

கணவன் மனைவிக்கிடையே நிலவிய குடும்ப பிரச்சினை இந்த தவறான முடிவிற்கு காரணமாக இருக்கலாம் எனவும், சம்பவத்தின் போது மனைவி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தனது தந்தை, தம்பி, தங்கை ஆகியோர் தொடர்ந்து வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை அவதானித்த 13 வயது சிறுமி தனது பெரியப்பாவிடம் தெரிவித்ததையடுத்து நால்வரும் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.