கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : நீதித்துறை அதிகாரிகளிடம் ஆரம்பிக்கப்படவுள்ள விசாரணை
கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதித்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (24) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறையுடன் தொடர்புடைய சிலரை ஏற்கனவே கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு
அத்தோடு, அரசாங்கம் இந்த சம்பவத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை எனவம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்படி விடயங்களை தெரிவித்தார்.
மேலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்