தேசபந்து தென்னகோன் தலைமறைவு : செவ்வந்தியை பார்த்தால் 1.2 மில்லியன் பரிசு
நாட்டில் தற்போது குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் வலை வீசி தேடுவதே அரசாங்கத்தின் 24 மணி நேர வேலையாக மாறியுள்ளது.
இதிலும் முக்கியமாக இஷார செவ்வந்தியினை கண்டுபிடிப்பதா அல்லது தேசபந்து தென்னகோனை கண்டுபிடிப்பதா என்ற குழப்ப நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) படுகொலையில், மூளையாக செயற்பட்டவராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தியினை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்ற நிலையில், அவரை கண்டுபிடிப்பவர்களுக்கான பணத்தொகையையும் அரசாங்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.
இதனடிப்படையில், பத்து இலட்சமாக இருந்த பரிசுத் தொகை தற்பொழுது ரூ.12 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இஷாரா செவ்வந்தி குறித்து எவ்வித முறையான அறிவிப்புக்களும் கிடைக்கப்பெறவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.
மற்றுமொரு பக்கம், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் காவல்துறையினரிடம் சரணடைய வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) அறிவுருத்தியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு மற்றும் பயணத் தடை மற்றும் ஐந்து வீடுகளில் சோதனை நடத்திய பிறகும் தேசபந்து தென்னகோன் இன்னும் சிக்கவில்லை.
இந்தநிலையில், இவ்வாறு மாறி மாறி தேடுதல் நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ளும் காவல்துறையினர் இந்த சம்பவங்கள் தொடர்பில் முறையான தகவல்களை ஏன் வெளியிடவில்லை ?, இஷார செவ்வந்தி சிக்குவாரா ?, தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படுவரா ? மற்றும் இச்சம்பவங்கள் தொடர்பிலான பின்னணி என்பவற்றை ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
