கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: கைதான காவல்துறை கான்ஸ்டபிள் தொடர்பான அதிர்ச்சி பின்னணி!
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்திரின் தொலைபேசியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் புகைப்படங்களை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.
அத்தோடு, மேலதிகமாக மற்றுமொரு துப்பாக்கியின் புகைப்படங்களையும் விசாரணை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைமறைவாகியுள்ள பெண்
இதேவேளை, குறித்த தொலைபேசியில் தற்போது தலைமறைவாகியுள்ள பெண் சந்தேகநபருக்கு சொந்தமானதாக அடையாளம் காணப்பட்ட தொலைபேசி எண்கள் இருப்பதையும், கேலரியில் இருந்து கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியின் புகைப்படங்கள் நீக்கப்பட்டிருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சந்தேக நபரிடம் நடத்தப்பட்டுள்ள விசாரணையில், தலைமறைவாகியுள்ள பெண், சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு இந்த புகைப்படங்களை அனுப்பியது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய பிரதான சந்தேகநபரின் நடத்தப்பட்ட விசாரணையில், முகமுவ, கட்டுவெல்லேகம வீதியைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற பெண் இந்த குற்றத்திற்காக துப்பாக்கியை கொண்டு வந்ததாக தெரியவந்தது.
மேலதிக விசாரணை
இவ்வாறானதொரு பின்னணியில், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான செவ்வந்தி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அவருடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு காவல்துறையில் பணியாற்றும் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பு குற்றப்பிரிவின் சிறப்பு காவல்துறை பிரிவால் கைது செய்யப்பட்டார்.
இதன்படி, தற்போது தலைமறைவாகியுள்ள பெண்ணை கைது செய்ய பல காவல்துறை குழுக்கள் நியமிக்கபட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.
you may like this,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
