கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய நண்பன்.!கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்
கணேமுல்லே சஞ்சீவவைச் சுட்டுக் கொன்ற நபரும் கணேமுல்லே சஞ்சீவவும் சிறிது காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அந்த நேரத்தில் சஞ்சீவவின் போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய உதவியாளராக தான் இருந்ததாக சந்தேகநபர் அதன்போது கூறியுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, கொலையாளிக்கு தலைமறைவாகியுள்ள பெண்ணால் அறிமுகப்படுத்தப்பட்ட பத்மே என்பவர், கொலை செய்யத் திட்டமிட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீவிர விசாரணை
இந்த நிலையில், ஏற்கனவே கணேமுல்ல சஞ்சீவவைக் கொல்லும் ஒப்பந்தம், துபாயில் மறைந்திருக்கும் அவரது முக்கிய போட்டியாளரான கெசெல்லபத்தர பத்மே என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொலையாளி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதன்போது, குறித்த ஒப்பந்தமானது, ஒன்றரை கோடி ரூபாய் பேசப்பட்டதாகவும், அந்தப் பணத்தில் இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறாதொரு பின்னணியில், காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
