யாழ். நகர மத்தியில் சகிக்க முடியாத துர்நாற்றம்! மாநகரசபை தூங்குகின்றதா.... பொதுமக்கள் விசனம்
யாழ்ப்பாண நகர மத்தியில் உள்ள வைத்தியசாலை வீதியில் யாழ் மாநகர சபையினால் முறையாக கழிவகற்றல் மேற்கொள்ளப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த பகுதி பொறுப்பு வாய்ந்தவர்களால் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியிலுள்ள வடிகால்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை எனவும் குப்பைகளைச் சேகரிப்பதற்காக வருவதில்லை எனவும் ஹோட்டல் வைத்திருப்பவர்கள் கழிவு நீரை வடிகால்களுக்குள் விடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாநகர சபைக்கு பல தடவை அறிவித்திருந்தும் சுத்திகரிப்பு பணியாளர்கள் குப்பையகற்றுவதற்காக 3 மாதங்களுக்கு மேல் வரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வடிகால்களில் குப்பைகள் தேங்கியிருப்பதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும், இரவில் நுளம்புத் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து ஐபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்கள் இந்த விடயங்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளயில் காண்க...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |