வேறு நாடுகளுக்கு செல்லும் ஆடைத் தொழிற்சாலைகள் : நிர்க்கதியாகும் தொழிலாளர்கள்
உற்பத்தி செலவு அதிகரித்து செல்வதை அடுத்து நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத் தொழிற்சாலைகளில் பாதியளவு ஏற்கனவே மூடப்பட்டுள்ளதாக சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பெறப்படும் ஆடை ஓடர்களின் அளவு குறைவடைந்துள்ளதாலும், உற்பத்தி செலவுகள் அதிகரித்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் தம்மிக்க பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைவடைந்த வருமானம்
தற்போது ஆடைத் தொழில்துறையின் வருமானம் 25 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அதன் காரணமாக முதலீட்டாளர்கள் வேறு நாடுகளில் முதலீடு செய்ய முனைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள்
ஏற்கனவே சுமார் பத்து பெரிய நிறுவனங்கள் இழப்பீடு கொடுத்து தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகவும், சில நிறுவனங்கள் தங்கள் வைப்புத் தொகையில் இருந்து தொழிலாளர்களுக்கு முழு அல்லது பகுதி ஊதியம் கொடுத்து தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யாவிட்டாலும் அவர்களை வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும் கூறுகிறார்.
மேலும், டிசம்பருக்குப் பிறகு இருபது சதவீத பெரிய தொழிற்சாலைகளை மூன்று மாதங்களுக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |