இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு
நாடு முழுவதும் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் இன்று (19) மாலை முதல் வழமைக்குத் திரும்பும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றியுள்ள FRANCOIS கப்பல் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள்
தொடர்ச்சியாக எரிவாயு கையிருப்புகள் கிடைத்து வருவதால், நாடு முழுவதும் விநியோக நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி, சந்தைக்கு வழமைபோன்று எரிவாயுவைத் தடையின்றி விநியோகிக்க முடியும் என நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 16ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |