விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் புதிய அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Litro Gas
Sri Lankan Peoples
By Vanan
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு இம்மாதம் 33,000 மெற்றிக் தொன் எரிவாயு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன் முதல் கப்பல் வரும் 6ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளது. இதனால், எதிர்வரும் 7ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.