எரிவாயு தரையிறக்கும் பணிகள் இன்றிரவு முதல் ஆரம்பம்
litro
gas cylinder
srilankan crisis
gas ship
By Kanna
நாடு வந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.
இதேவேளை, இவ் எரிவாயுவை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயுமாறு சில சிவில் அமைப்புகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி